விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு இலங்கை மன்றத்தில்.!
இலங்கையின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தியடைவதை முன் னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் இலங்கை மன்றத்தில் நடைபெற்றுள்ளது.
சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நூல்களை எழுதியுள்ள அவர் பிரபல எழுத்தா ளர், கவிஞர், பாடலாசிரியர், மொழி பெயர்ப் பாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் என்ற வகை யில் தனது அரை நூற்றாண்டு கால எழுத்துப் பணியில் 300க் கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அவரால் எழுதி வெளியிடப்பட்ட மார்ட்டின் விக்கிரமசிங்க பற்றிய நூல் சிறந்த இலக்கிய முயற்சியாக கருதப்படுகின்றது.
அதேபோல் பல ரஷ்ய மற்றும் இந்திய நாவல்களையும் சிறுகதைகளையும் அவர் மொழிபெயர்த்துள்ளார்.
1966 ஆம் ஆண் டில் சோவியத் ஒன்றியத்தின் பாக் நகரத்திலும் 1967 ஆம் ஆண் டில் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரத்திலும் இடம்பெற்ற ஆசிய - ஆபிரிக்க எழுத்தாளர்கள் சம்மேளனங்களில் கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹ இலங் கையைப் பிரதி நிதித்துவம் செய்துள்ளார்.
அவரது அரை நூற்றாண்டு கால இலக்கிய சேவையைப் பாராட்டி வயம்ப பல் கலைக்கழகம் அவருக்கு விசேட கலாநிதி பட்டமளித்து கௌரவித்துள்ளது டன் இலங்கை அரசாங்கத்தினால் டபிளியு.ஏ. அபேசிங்கவுக்கு கலா கீர்த்தி விருதும் வழங்கப்பட்டுள்ளன.
டபிளியு.ஏ. அபேசிங்ஹவினால் எழுதப்பட்ட “எனது உலகமும் அவர்களது உலகமும்” என்ற நூல் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. கலா நிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் சேவையைப் பாராட்டும் முகமாக சந்ரசிறி செனெ விரத்ன, உதேனி சரத்சந்ர ஆகியோரால் தொகுக்கப்பட்ட “அபய முத் திரை” மற்றும் தீபசந்ரி அபேசிங்ஹ, சுமுது சதுராணி ஜயவர்தன ஆகியோரால் எழுதப்பட்ட “அபேசிங்ஹ நூல் தொகுப்பு” ஆகிய இரு நூல்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
கலாநிதி டபிளியு.ஏ. அபேசிங்ஹவின் அரை நூற்றாண்டு கால சேவையைப் பாராட்டிய ஜனாதிபதி, கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹ இந்த நூற்றாண்டில் பெருமையுடன் குறிப்பிடக்கூடிய பிரபல எழுத்தாளரும் இலக்கியவாதியும் கல்விமானும் ஆவார் எனத் தெரிவித்துள்ளாா்.
ருவன்வெலி மகாசாயவின் விகாராதிபதி வண. பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர், பிரபல பாடலாசிரியர் வண. ரம்புக்கண சித்தார்த்த தேரர், பாரா ளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க உள்ளிட்ட அதிதிகள், பிரபல பாடகி நந்தா மாலனி உள்ளிட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனா்.