Breaking News

சவால் விடுத்த டியூனிசியா ; வெற்றிக்கனியை பறித்தது இங்கிலாந்து.!

டியூனிசியாவுக்கு எதிராக வொல்வோக்ரட் எரினா விளையாட்டரங்கில் திங் கட்கிழமை இரவு நடைபெற்ற குழு “ஜீ ” உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட் டியில் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து, ஆட்டத்தின் கடைசிக் கட் டத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படை யில் வெற்றி ஈட்டியுள்ளனா்.

இரண்டு அணிகளும் சிறந்த கால் பந்தாட்ட வியூகங்களைப் பிரயோகி த்து சிறந்த ஆற்றல்களை வெளிப்படு த்தியவாறு வேகமாக விளையாடிய இப் போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் டியூனிசியா கோல்காப்பாளர் மோயுஸ் ஹசனின் இடது கையில் பட்டுவந்த பந்தை இங்கிலாந்து அணித் தலைவர் மிக இலாவகமாக கோலி னுள் புகுத்தினார்.

அதே சந்தர்ப்பத்தில் மோயுஸ் ஹசனின் இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும் அவரால் வலியைத் தாங்கமுடியால் ஓய்வு பெற நேரிட்டது. இதன் காரணமாக ஆட்டம் 5 நிமிடங்களுக்கு தடைப்பட்டது.

அவருக்குப் பதிலாக மாற்று கோல்காப்பாளர் பாறூக் பென் முஸ்தபா களம் நுழைந்தார். முஸ்தபா உள்ளே நுழைந்த இரண்டாவது நிமிடத்தில் அற்புதமாக செயற்பட்டு இடதுபுறமாக கீழ்நோக்கித் தாவி பந்தைப் பிடித்து ஜோர்டான் ஹெண்டர்சனின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் மாறிமாறி கோல் போட முயற்சித்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதேவேளை இரண்டு அணிகளினதும் கோல்காப்பாளர்கள் மிக சாதுரியமாக செயற்பட்டு கோல்கள் போடப்படுவதை தடுத்தவண்ணம் இருந்தனர்.

இதனிடையே பக்ரெடின் பென் யூசுபை தனது பெனல்டி எல்லைக்குள் கய்ல் வோக்கர் முரணான வகையில் வீழ்த்தியாதல் டியூனிசியாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அப் பெனல்டியை 35 ஆவது நிமிடத்தில் கோலினுள் புகுத்திய பெர்ஜானி சசி, கோல் நிலையை 1 க்கு 1 என சமப்படுத்தினார்.

இதனை அடுத்து உஷார் அடைந்த இங்கிலாந்து அணியினர் இடைவேளைக்கு முன்னர் கோல்போடுவதற்கு எடுத்த நான்கு முயற்சிகள் வீண்போயின.

இடைவேளையின் பின்னர் இரண்டு அணியினரும் கடுமையாக விளையாடிய தால் அவ்வப்போது ப்றீ கிக்குகள் வழங்கப்பட்டன. போட்டி முழு நேரத்தைத் தொடும்வரை டியூனிசியாவின் இரண்டு முயற்சிகளும் இங்கிலாந்தின் மூன்று முயற்சிகளும் கைகூடாமல் போயின.

உபாதை ஈடு நேரத்தை (இஞ்சரி டைம்) போட்டி தொட்ட முதலாவது நிமிடத் தில் கீரான் ட்ரிப்பரின் கோர்ணர் கிக்கை நன்கு பயன்படுத்திக் கொண்ட இங்கி லாந்து அணித் தலைவர் ஹெரி கேன் தனது தலையால் பந்தை தட்டி கோல் போட்டு டியூனிசியாவைப் பிரமிக்க வைத்துள்ளனா்.