Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் பகிரங்க சவால்!

இரண்டு மதுபானசாலைகள் நடாத்துவதற்கான அனுமதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் பெற்றதை  உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அடுத்த நிமிடமே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

  மேலும் தெரிவித்ததாவது., 


ஆயுதக்குழுக்களாக இருந்தால் என்ன ஆவா குழுக்களாக இருந்தால் என்ன அனைத்திற்கும் இராணுவமே கார ணம் எனவும், இராணுவத்தின் துணை யுடன் ஆயுதக் குழுக்கள் செயற்படு வதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் கிளிநொச்சி மதுபானச்சாலை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப் பப்பட்டபோது, கிளிநொச்சிக்கு ஒரு மதுபானச்சாலை வேண்டுமென தான் கோரவில்லையெனச் சிறீதரன் தெரி வித்துள்ளார். 

கிளிநொச்சியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சிக்கு ஒரு மதுபானசாலை வேண்டும் என கோரியிருந்தார் என பத்திரிகைகளில் செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இவ்விடயமாக சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம் வினவிய போது பத்திரிகைகளில் வெளியாகும் செய் திகள் எல்லாம் சரி என்றால் பத்திரிகைகள் தான் அரசியல் நடத்த வேண்டும் என தெரிவித்த ஸ்ரீதரன் முடிந்தால் அதனை உறுதிப்படுத்துங்கள் எனத் தெரி வித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துவாரகேஸ்வரன், சிறீதரன் இரண்டு மதுபானசாலைகள் நடாத்துவதற்கான அனுமதி பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாங்கியிருந்தார் என தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறீதரன், தான் அவ்வாறு மதுபானச் சாலைகள் நடாத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை வாங்கியிருந்தது உண்மை என்றால் அதனை உறுதிப்படுத்துங்கள் எனவும் அது உறுதிப்படுத்தப் படும் பட்சத்தில் அடுத்த நிமிடமே தன்னுடைய பதவியை ராஜினாமாச் செய் வதாகத் தெரிவித்துள்ளார்.