Breaking News

அதிகமானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என்கிறாா் - சாலிய பீரிஸ்

தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

காணாமல் போனவர்கள் தொடர்பான 13,000 கோப்புகளை முன்னைய தேசிய நல்லிண க்க ஒருங்கிணைப்பு அமைச்சு வழங்கியுள் ளதாக மேலும் தெரிவித்துள்ளார். 

காணாமல் போனவர்கள் குறித்த ஆவணங் களை அலுவலகம் கோரியதை தொடர்ந்து பல கிராம சேவையாளர்கள் தங்களிடமிருந்த கோப்புகளை அமைச்சிடம் கையளித்துள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது. 

முன்னைய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடமிருந்து 13,000 கோப்புகள் கிடைத்துள்ளன, இந்த கோப்புகளில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருகின் றோம், என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் குறிப்பிட்ட கோப்பில் உள்ள சம்ப வங்கள் குறித்து ஏற்கனவே நாங்களும் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க எண்ணியுள்ள தாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 12 பிராந்தியங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் இதில் 5 அலுவலகங்கள் வடக்கிலும் 3 அலுவலகங்கள் கிழக்கிலும் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. 

 இதன் மூலம் எங்கள் விசாரணைகளை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல் போன நாடு இலங்கை என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் 1970 களில் சைப்பிர சில் 4000 பேர் காணாமல் போனார்கள் இது குறித்து விசாரணைகளை மேற் கொள்வதற்காக 1990களில் அலுவலகமும் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணைகள் இன்று வரை தொடர்கின்றன என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் விசாரணைகளும் நீண்ட காலம் நீடிக்கலாமெனத் தெரிவித்துள் ளார்.