விஜயகலாவிற்கு எதிராக விசனம் - துசார திசநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியே றுவதற்கு முன் அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்கு மாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறு மய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜயகலா மகேஸ்வரன் வெளி நாடொன்றிற்கு செல்லவுள்ளதாக தக வல் கிடைத்துள்ளதாக கட்சியின் பிர ச்சார செயலாளர் துசார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்றால் அது விசார ணைகளிற்கு இடையூறாக அமையும் இதன் காரணமாக உடனடி நடவடிக் கையை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். ஐக்கியதேசிய கட்சி விஜயகலா மகேஸ்வரனை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்க வேண்டு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








