Breaking News

இந்திய அரசுடன் பேச்சு வாா்த்தை நடத்துமாறு பிரதமரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.!

வடக்கு வீட்­டுத்­திட்டம் தொடா்பாக இலங்கை அர­சாங்கம் இந்­திய அர­சுடன் உட­ன­டி­யாக பேச்­சு ­வார்த்தை நடத்தி இந்­திய வீ­ட­மைப்பு திட்­டத்­தையே முன்­னெ­டுக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

வடக்கில் சீனா முன்­னெ­டுக்­க­வுள்ள வீட­மைப்புத் திட்­டத்தை அதே பெறு­ம­தி யில் இந்­தியா முன்­னெ­டுப்­ப­தாக இந்­திய அர­சாங்கம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு உறுதியளித்துள்­ள­தா­கவும்  அதனை தாம் பிர­த­ம­ருக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. 

இதே­வேளை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் 25 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவும் கூட்­ட­மைப்பு வலியு­றுத்­தி­யுள்­ளது. வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கான வீட­மைப்பு திட்­டத்தை அமைப்பதில் இந்­திய – -சீன விவ­காரம் தொடர்பில் கடந்த அமைச்­ச­ரவைக் கலந்துரையாடலில் விவ ரிக்கப்பட்டுள்ளது. 

அதற்­க­மைய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சந்­தித்து இவ் விட­யங்கள் குறித்து ஆராய்­வ­தாக ஜனா­தி­ப­தி -­ பி­ர­தமர் இரு­வரும் கூறி­யி­ருந்த நிலையில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தையில் ஈடுபட்டுள்ளனா். 

இது குறித்து கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ.சுமந்­திரன் கூறு­கையில், 


வடக்கின் மீள் குடி­யேற்­ற­த்துக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்ற போதி லும் மீள்­கு­டி­யேற்­றத்­துக்­கான நிதி ஒதுக்­கீ­டுகள் பற்­றாக்­கு­றை­யாக உள்­ளன. 

மக்­க­ளுக்­கான காணி­களை கொடுத்து குடி­யே­றக்­கூ­டிய போதிலும் அங்கு சுமார் 1600 குடும்­பங்கள் குடி­ய­மர்த்­தப்­படும் நிலையில் அவர்­க­ளுக்­கான அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத நிலைமை உள்­ளது. 

அம்­மக்கள் எம்­மிடம் இந்த விட­யங்கள் குறித்து தமது கஷ்­டங்­களை வெளிப்­ப­டுத்­திய நிலையில் பிர­தமர் யாழ். விஜ­யத்தை மேற்­கொண்­ட­போது இந்த நிலை­மை­களை நாம் எடுத்துக் கூறினோம். கொழும்பில் மீண்டும் சந்­தித்து உரிய அதி­கா­ரி­க­ளையும் அழைத்து இவ் விவ­காரம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவோமென பிர­தமர் தெரிவித்துள்ளாா். 

அதற்­க­மைய இன்று (நேற்று) பிர­த­மரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி னோம். மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிதி ஒதுக்­கக்­கோரி எமது தரப் பில் கருத்­துக்­களை முன்­வைத்தோம். இதற்­கான நட­வ­டிக்­கை­களை விரை வில் முன்­னெ­டுப்­ப­தாக பிர­தமர் தெரிவித்துள்ளாா். 

அதேபோல் உரிய அதி­கா­ரி­க­ளி­டமும் இவ்­வி­டயம் குறித்து கவனம் செலுத்­தவும் பணித்­துள்ளார். வடக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்டம் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சீனா­வுக்கா அல்­லது இந்­தி­யா­வுக்கா என்ற சர்ச்­சைகள் பற்றி எரிய ஆரம்பித்துள்ளன. 

வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தாக ஆரம்­பத்தில் இந்­தியா கூறி­யுள்ள நிலையில் தற்­போது சீனா புதிய வீட்டுத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது குறித்து அர­சாங்­கத்­துக்கு தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே இப்­போது குழப்­பங்கள் ஆரம்பித்துள்ளன.

எனினும் வடக்கில் 40 ஆயிரம் வீட்டுத் திட்­டத்தை அமைத்­துக்­கொ­டுப்­ப­தற்கு இந்­தியா ஆரம்­பத்தில் முன்­வைத்த கடன் திட்­டங்­களை விடவும் குறைந்த அல்­லது மாற்று திட்டம் ஒன்­றினை சீனா முன்­வைத்­துள்­ளது. எனினும் நாம் இந்­திய தரப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதில் சீனாவின் அதே திட்­டத்தை அதே தொகையில் தாம் செய்து தரு­வ­தாக இந்­தியா எமக்கு வாக்­கு­றுதி அளித்துள்ளது. 

இந்­தியா எமக்கு உறு­தி­ய­ளித்­தமைக்கு அமைய இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் உட­ன­டி­யாக பேச்­சு­வார்த்தை நடத்தி இந்­திய வீட­மைப்பு திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். 40 ஆயிரம் வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் இணைந்து ஒழுங்கமைத்து வழங்க வேண்டும். 

எமது மக்களுக்கான வீட்டுத்திட்டம் அவசியம். அதனை உரிய நேரத்தில் பெற் றுக்கொடுக்க வேண்டும் என்பதை நாம் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்.

அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் 25 ஆயிரம் வீடுகளை கொண்ட ஒரு தொகுதியை அமைக்கும் நடவடிக்கைகளை ஆராயப்பட்ட நிலையில் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாம் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.