சீன நிறுவனத்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்.!
சீன வணிக நிறுவனங்களுடனான பங்களிப்புடன் அபிவிருத்தி திட்டங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்த நிலையில் உயர்தர பந்தோபஸ்துடன் இந் நிறுவனங்களுக்கு சேவை ஆற்றவேண்டிய உயிராக்க விளைவான அவசியம் ஏற்பட்டுள்ளது.
பொறுப்பான தடுப்பு மற்றும் பந்தோப ஸ்து சேவைகளை வழங்குவதற்கு பாதுகாப்பு அதிகாரிகளின் வெறும் நுணுக்கமான கண்காணிப்பு உபகரண ங்களை பொருத்துவதிலும் பார்க்க இலங்கையிலும் சீனாவிலும் உள்ள அதி சிறந்த தடுப்பு மற்றும் பந்தோ பஸ்து முகவர்களுக்கிடையே பங்கு டமை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தவிர்க்க முடியாத விடயமாகும்.
முழுமையாக அரசாங்கத்திற்கு சொந்தமான LRDC Services Private Limited மற்றும் Hua Tai Zong Heng Security Technology (Pvt) Limited நிறுவனங்களுக்கிடையே பல தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை அடுத்து கட்டிட நிர்மாண பொறி யியல், துறைமுக அபிவிருத்தி, நெடுஞ்சாலை அபிவிருத்தி ஆகியவற்றை சேர்ந்த சீன நிறுவனங்களுக்கு நிபுணத்துவ, ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங் குவதென சரியாக இனம்காணப்பட்டமை காரணமாக ஒத்துழைப்பு கட்டமைப் புக்குள் பல்வகை சீன தொழில்நுட்ப நிபுணத்துவமும் இலங்கை ஆட்பல அபி விருத்தியும் முகாமைத்துவ நிபுணத்துவமும் தேவைப்பட்டன.
ஆதலால் குறித்த இரண்டு நிறுவனங் களும், பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட் டலி சம்பிக ரணவக்கவின் முன்னிலை யில் அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜில் இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டுள்ளது.
பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை காணி மீட்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள LRDC Services Private Limited நிறுவனமும் அரசாங்க துறைக்கு நாடு முழுவதும் 750 வேலைத் தளங்களையும் 4200க்கும் அதிகமான பயிற்றப்பட்ட ஆட்புல பாதுகாப்பு உத்தி யோகத்தர்களையும் பயன்படுத்தும் ஏகபோக உரிமையை பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சு, நீர்வள சபை, அநேகமான அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க அமைப்புக்கள் ஆகியன இந் நிறு வனத்தின் வாடிக்கை நிறுவனங்களில் அடங்குகின்றன.
Hua Tai Zong Heng Security Technology (Pvt) Limited நிறுவனம் இலங்கையில் ஸ்தா பிக்கப்பட்டதும் முன்னேற்றகரமான தொழில்நுட்ப அணுகுமுறைகளை பயன் படுத்துவதில் வல்லமையுள்ளதுமான China Security Technology Group Co Ltd நிறு வனம் தடுப்பு மற்றும் பந்தோபஸ்து வணிகத்தில் திறத்தொழிலையும் பேண் தகைமையையும் உறுதிப்படுத்த இத்தகைய தொழில்நுட்பங்களின் புதிய தீர் மானம் எடுக்கும் ஆற்றல்களை உடையது.
China Security Technology Group Co Ltd பிரதானமாக பாரிய முதலீட்டு திட்டங்கள், சீனாவின் பட்டுப் பாதை ஊடான நாடுகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் சொத் துக்கள்,
நிலையான அல்லது நகரும் இடங்கள், பௌதீக மற்றும் தொழில் நுட்ப பாதுகாப்பு, பிரமுகர்கள் பாதுகாப்பு, தரை அல்லது கடல்மார்க்க சரக்கு இட மாற்று பாதுகாப்பு, இடர் மதிப்பீடு மற்றும் ஆலோசனை, பாதுகாப்பு பயிற்சி, பொது பாதுகாப்பு தொழில்நுட்ப இடர்காப்பு நடவடிக்கை, உபகரணங்கள் வாட கைக்கு வழங்கலும் விற்பனையும் போன்றவற்றிற்கு பாதுகாப்பு சேவைகளை யும் ஆதரவையும் வழங்குகிறது.
China Security Technology Group Co Ltd அதன் விருந்தோம்பல் நாடுகளுடன் ஒத் துழைப்பையும் பரஸ்பரம் நம்பகரமான உறவுமுறைகளையும் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சர்வதேச பாதுகாப்பு நடைமுறைகளை ஒருங்கிணைப் பதன் மூலமும் சட்ட இசைவுடன் அதன் சர்வதேச பாதுகாப்பு பலத்தை கட்டி யெழுப்ப முன்வந்துள்ளது.