Breaking News

நிமல் சிறி­பால விரைவில் 16 பேர் அணி­யுடன் இணைவார் - டிலான் பெரேரா

அமைச்சர் நிமல் சிறி­பால டி. சில்வா விரைவாக அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி 16 பேர் அணி­யுடன் இணைவாா் எனவும் மத்­தள விமான நிலை­யத்தை விற்­பனை செய்யும் கொள்­கையில் அவர் இல்லையென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்துள்ளாா். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி 16 பேர் அணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில்  கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரிவித்துள்ளாா். 
 மேலும் தெரிவிக்கையில்....,

மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்கும் அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தாக அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்­த­போதும் அது தொடர்­பான சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தாக எங்­க­ளிடம் தெரி­வித்துள்ளாா். 

அத்­துடன் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­களில் ஒரு சில­ரைத்­த­விர ஏனை­ய­வர்கள் எமது நிலைப்­பாட்­டிலே இருக்­கின்­றனர். நாட்டின் வளங்­களை விற்­ப­னை­செய்யும் கொள்கை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு இல்லை. 

அதனால் அவர் விரைவில் அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி எங்­க­ளுடன் இணைந்­து­கொள்வார் என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யின்­போதும் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் தீர்­மா­னத்­திலே அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா இருந்தார். இருந்­த­போதும் ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவின் பேரிலே அவர் வாக்­க­ளிப்பில் வில­கி­யி­ருந்தார். 

அப்­போதும் அவர், தான் அர­சி­யலில் இருந்து ஓய்­வு­பெ­றப்­போவதாக தெரி­வித்தே இவ்­வாறு நடந்­து­கொண்டார். எங்­க­ளுக்குள் கருத்து வேறு­பா­டுகள் இரு ந்­தாலும் அர­சாங்­கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன் மஹிந்த ராஜ­பக்ஷவை பிர­த­ம­ராக்கும் போராட்­டத்தில் எங்­க­ளுடன் இணைவாா்கள். 

கேள்வி: கோத்­த­பாய ராஜ­பக்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டப்­பட்டால் 16பேர் அணி ஆத­ர­வ­ளிக்­குமா? 

பதில்: மஹிந்­த­ரா­ஜபக்ஷ பெய­ரி­டு­ப­வரே கூட்டு எதிர்க்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராவார். ஆனால் இது­வரை அவ்­வாறு யாரையும் மஹிந்த ராஜபக்ஷ பெய­ரி­ட­வில்லை. 

அத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டப்­ப­டு­ப­வ­ருக்கு சிங்­கள மக்­க­ளது வாக்­கு­க­ளுடன் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்­ப­தையும் அவர் கருத்­திற்­கொள்வார். 

கோத்­த­பாய ராஜ­பக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் மக்­களின் வாக்­குகளை பெற்­றுக்­கொள்­வது சிர­ம­மாகும். என்­றாலும் அந்த வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வர்கள் 16 பேர் அணியில் இருக்­கின்­றனர். 

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பொதுஜன பெரமுனவுக்கே வாக்களித்தனர். சிறுபான்மை மக்களே அதிகள வில் எங்களுக்கு வாக்களித்தனர். அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு சிறு பான்மை மக்களின் வாக்குகள் மிகவும் அவசியமெனத் தெரிவித்துள்ளாா்.