"மோத வேண்டுமெனில் எம்மோடு மோதுங்கள்"
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் எமது பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின் எமது பத்திரிகையின் உயர்மட்ட பத்திரிகை ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள முடி யும்.
அதைவிடுத்து இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் என "நியூயோர்க் டைம்ஸ்" சர்வதேச நாளிதழின் ஆசிரியர் மைக்கல் ஸ்லெக்மன் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் அண்மையில்" நியூயோர்க் டைம்ஸ்" நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அவ்விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த கருத்து குறித்து "நியூயோர்க் டைம்ஸ்" நாளிதழின் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது எமது பத்திரிகையால் கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பான செய்திக்கான தக வல் பங்களிப்பினை மேற்கொண்ட இலங்கை ஊடகவியலாளர்கள் இருவருக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் ஏற்கப்பட முடியாதவையாகும். இத்தகைய செயற்பாடுகள் ஊடக சுதந்திரத்துக்கு தடையாக அமைவதுடன் ஊடகங்களை "அமைதிப்படுத்தும்" விதமாக வும் அமைந்துள்ளன.
அத்தோடு செய்தியை அறிந்துகொள்வதில் இலங்கை மக்கள் கொண்டுள்ள உரிமையினை மறுதலிப்பதாகவும் உள்ளது.
இலங்கையின் ஊடகவியலாளர் கள் எமது நிறுவனத்துக்கோ அல்லது வேறு நிறுவனத்துக்கோ எவ்வித அச்சுறுத்தல் களுமின்றி சுதந்திரமாக செயற்படுவதை உரிய அதிகாரசபைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மேலும் எமது பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் ஏதேனும் முரண் பாடுகள் இருப்பின் "நியூ யோர்க் டைம்ஸ்" பத்தி ரிகையின் உயர்மட்ட ஆசி ரியர்களைத் தொடர்புகொள்ள முடியும். அதனை விடுத்து இலங்கை ஊடக வியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் ஏற்க முடியாதவையாகும் என்று தெரிவித்துள்ளார்.








