இலங்கையில் இந்திய சீன யுத்தம் என்கிறாா் மனோகணேசன்.!
இலங்கையில் வீடுகளை வழங்கும் திட்டத்தில் இந்திய சீன யுத்தம் நடை பெறுவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைச்சின் வட க்கு மாகாண அலுவலகத்தை திற ந்து வைத்து உரையாற்றிய மனோ மேலும் தெரிவிக்கையில்.......
வடக்கு கிழக்கில் வீடுகளை அமைத் துக்கொடுக்கும் பணியில் மூன்று வரு டங்களை நகா்த்தியுள்ளோம். ஒன்றரை இலட்சம் வரையான வீடுகள் தேவை யாக இருந்தது. இதில் நாற்பத்தையாயிரம் வரையான வீடுகளை இந்திய அர சாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது.
இன்னும் சில வீடுகளை அரச சார்பற்ற நிறுவனங்களும், அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்கள் கிராமங்களை தெரிவு செய்து அவரும் வீட்டுத் திட்டங் களை அமைத்துக் கொடுத்துள்ளார். அத்தோடு சில வீடுகளை இராணுவத்தின ரும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அதேவேளை ஒரு இலட்சம் வீடுகளை கட்டவேண்டும் என்று எமது சக அமை ச்சர் சுவாமிநாதனுக்கு அப் பொறுப்பு வழங்கப்பட்டு அவர் மூன்று வருடங் களாக கட்டிக் கொண்டிருக்கின்றார், ஆனால் இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை.
ஆரம்பத்தில் பொருத்து வீடுகள் வந்தன பொருத்து வீடுகள் வடக்கு கிழக்கில் பொருந்தாது என்று வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள் நானும் எதிர்த்தேன் அதனால் அது வரவில்லை
ஆனால் இப்பொழுது இலங்கையில் இந்தியாவா சீனாவா என்று இந்திய சீன யுத்தம் வீட்டுப் பிரச்சினையில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் சீனா அமைத்துக் கொடுக்கப் போகும் வீடுகள் என்று சொல்லப்படு கின்ற அந்த வீடுகளும் பொருத்து வீடுகள் என்றே நினைக்கிறேன். எனத் தெரி வித்த அமைச்சர் எனது அமைச்சுக்கும் 50 வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளாா்.