இந்திய நிதி உதவியில் 750 பொலிஸ் ஜீப் வண்டிகள்
இலங்கை பொலிஸாரினால் பொது மக்களுக்கு வழங்கும் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேவையை விரிவுபடுத்துவதற்காக இலங்கை பொலிஸாருக்கு மேலதிக ஜூப் வண்டிகள் கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை பொலிஸாருக்கு 600 ஜீப் வண்டிகளும் பொலிஸ் அதிர டிப்படைக்கு 150 ஜீப் வாகனங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இவை இந்திய நிதி உதவியின் கீழ் கொள்வனவு இடம்பெறவுள்ளது. இத ற்காக அரச நிர்வாகம் மற்றும் முகா மைத்துவம், சட்டம் ஒழுங்கு அமைச்சின் தீர்மானத்திற்கு அரசாங்கம் அங்கீ காரம் வழங்கப்பட்டுள்ளது.