“சில அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு மாறாக எழுப்பும் கோசங்கள் காலம் கடந்தவை”
இன்றைய அரசாங்கம் நாட்டை துண்டாடுவதற்கோ காட்டி கொடுப்பதற்கோ முயற்சிக்கவில்லை. இதற்கு பின்னரும் ஒருபோதும் அத்தகைய முயற்சிப் பதற்கு அனுமதிக்கப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளாா் ஜனாதிபதி, படையினரை சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுவித்தது தற்போதைய அர சாங்காமெனத் தெரிவித்துள்ளாா்.
நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டா மென இராணுவத்தினரை பாதுகாக்கு மாறு என்றும் கோரி காலம் கடந்த கோசங்களினால் சில அரசியல்வாதி கள் லிப்டன் சுற்று வட்டாரத்தில் இரு ந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள் வது தமது குறுகிய அரசியல் நோக் கமென ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.
நேற்று பிற்பகல் மன்னம்பிட்டிய நகரில் ”ஹெலபொஜூன்” தேசிய உணவகத் தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு கோசமும் இன்று செல்லுபடியானவை அல்ல என்றும், அன்று குறிப்பிடப்பட்ட மின்சாரக் கதிரை சர்வதேச யுத்த நீதி மன்றம், சர்வதேச நீதிபதிகளை கொண்டு வருதல் ஆகிய அனைத்து விடயங் களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முற்றுப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் முன்வைத்த பிரச் சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து வரலாற்று முக்கியத்துவமிக்க மாற் றத்தை தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளாா்.
எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 180 திட்டங்களை மூன்று நாட்களில் மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் சுமார் 60 திட்டங்கள் ஜனாதிபதி, அமைச்சர் கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்களின் பங்குபற்றுதலு டன் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதே நேரம் 134 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கந்த சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான அலுவலகம் நேற்று பிற்பகல் ஜனாதி பதியினால் திறந்து வைக்கப்பட்டது.
எழுச்சிபெறும் பொலன்னறுவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விகாரைகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங் களுக்கேற்ப சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மன் னம்பிட்டிய மாகம்தொட்ட விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமய போதனை மண்டபம், பிக்குகளுக்கான தங்குமிட வசதிகளைக்கொண்ட இர ண்டு மாடி கட்டடம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன.
132 மில்லியன் ரூபா செலவில் மன்னம்பிட்டி வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மற்றும் சிகிச்சை கட்டடமும் நேற்று பிற்பகல் ஜனாதிபதி யினால் திறந்து வைக்கப்பட்டன.
அரசியல் கட்சி பேதமின்றி மக்கள் பிரதி நிதி களும் பெரும் எண்ணிக்கையான மக்களும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித் துள்ளனா்.