Breaking News

எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா?

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் தெரிவிக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணை கொண்டு வரப் பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் சியின் ஆளும் தரப்பில் இருந்து வெளி யேறிய 16 உறுப்பினர்களில் 15 பேர் பொது எதிரணியுடன் இணைந்துள்ள னா். 

இதனையடுத்து தாம் 70 பேர் எதிரணியில் அங்கம் வகிப்பதாகவும் ஆகவே தம க்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கையை கூட்டு எதிரணி தொடர்ச்சியாக முன்வைத்தவாறு உள்ளனா்.

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அங்கம் வகிக்கின்ற காரணத்தினால் பிரதான கட்சிகள் தவிர்ந்து மூன்றாவது பெரும்பான்மை கட் சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றது. 

இந் நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுயாதீன அணி யாக செயற்படும் பொது எதிரணியினர் தமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இது குறித்து எழுத்து மூல கடிதத்தை கடந்த வாரம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப் படைத்தனர். 

எனினும் பொது எதிரணியின் கோரிக்கை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் பொது எதிரணி வழங்கிய கடிதத்தை சபாநாயகர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவுக்கு வழங்கியதுடன் அதற்கான பதிலை தமக்கு வழங்க வேண்டுமெனக் கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கமைய சபாநாயகரின் கோரிக்கைக்கான பதில் கடிதத்தை ஐ.ம.சு.க செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று அனுப்பினார். இன்று பாராளு மன்ற அமர்வுகூடவுள்ள நிலையில் இந்த சர்ச்சைக்கான பதிலை சபாநாயகர் சபையில் முன்வைப்பார். 

எவ்வாறு இருப்பினும் பிரதான எதிர்க்கட்சி பதவி பொது எதிரணிக்கு வழங் கப்படக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன் னணி உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றதுடன் அரசாங்கத்தின் ஒரு சாராரும் அக் கருத்தை முன்வைத்துள்ளனர். 

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்கின்ற நிலையில் அரசாங்கமாகவும் எதிர்க்கட்சியாகவும் ஒரே கட்சி இருக்க முடியாதென அவ்வாறு பொது எதிரணியின் அழுத்தங்களின் காரணமாக அவர்களுக்கு எதிர்க்கட்சி பதவியை வழங்குவது ஜனநாயக பாராளுமன்றத்தின் தவறான ஒரு எடுத்துக்காட்டு என வும் விமர்சிக்கின்றனர். 

பொது எதிரணியினர் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தில் செயற்பட முடியாது. அவர் கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேற வேண்டும். 

அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டு மெனச்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.