போதைப்பொருள் கடத்தலிற்கான மகிந்த அரசாங்கம் புகலிடமளித்தது-சட்டமொழுங்கு அமைச்சர்
முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் போதைப்பொருள் கட த்தல் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக சட்ட மொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வருடகால ஆட்சியின் போது இலங்கையை ஜனநாயகம் நில வும் சுதந்திர நாடாக நல்லாட்சி அர சாங்கம் மாற்றியுள்ளதாக சட்டமொ ழுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்தும பண் டார தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் குற் றச்செயல்களின் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கடந்த மூன்று வருட காலப் பகுதியில் பாலியல் வன்முறை மற்றும் கொலைகள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச காலத்தில் 600 ஆக காணப்பட்ட கொலைகளை 400ஆக குறைத்துள் ளோம், சிறுவர் துஸ்பிரயோகம் கொள்ளை போன்ற சம்பவங்களும் குறை வடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை போதைப்பொருள் ஓழிப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ள தாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் குற்றவாளி களை பாதுகாக்காது எனவும் தெரிவித்துள்ள அவர் போதைப்பொருள் கடத்த லில் ஈடுபடுபவர்களிற்கு எதிர்காலத்தில் கடும் தண்டனைகளை வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுப வர்களிற்கு புகலிடம் அளித்தது, அவர்களிற்கான பாதுகாப்பை அது வழங்கியது எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளாா்.
பொலிஸார் போதைப்பொருட்களை கைப்பற்றிய வேளைகளில் அரசாங்கத் தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தலையிட்டு அவற்றை விடுவித்தனர் என தெரி வித்துள்ள சட்டமொழுங்கு அமைச்சர் தற்போது சட்டமொழுங்கு அமுலாக்கல் பிரிவினர் சுதந்திரமாகச் செயற்படக் கூடியதாகவுள்ளது.








