இந்திய இலங்கை உடன்படிக்கையை ராஜீவ்காந்தி நம்பியதாக - இராணுவ அதிகாரி.!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார் என முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவின் சிறுபான்மை யின மக்களிற்கான தேசிய ஆணைக் குழுவின் உறுப்பினராக உள்ள பிரவீன் தவார் இக் கருத்தினை ஏசியன் ஏஜில் பதிவு செய்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உல கின் 57 நாடுகளிற்கு சுற்றுப் பயணங் களை மேற்கொண்டுள்ள போதிலும் இந்தியாவின் அயல்நாடுகளுடனான உறவு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமானதாக காணப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.
ராஜீவ்காந்தி இந்தியாவின் வெளிவிவகார கொள்கையை இராஜதந்திர முதிர்ச்சியுடன் கையாண்டார் எனவும் ராஜீவ்காந்தி பிரதமரான வேளை இலங் கையில் நிலவரம் மோசமடைந்து கொண்டிருந்தது அரசவன் முறை தீவிர மடைந்ததாகத் தெரிவித்துள்ளாா்.
இது தமிழ்நாட்டு மக்களின் ஆன்மாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண் டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள பிரவீன் தமிழ்நாட்டு மக்கள் தமிழர் களிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டுமென விரும்பினர், புதுடில்லி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கான அழுத் தங்களை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளாா்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே இந்திய இலங்கை உடன்படிக்கை கைச் சாத் திடப்பட்டது ராஜீவ்காந்தி அந்த உடன்படிக்கை தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றையும் பாதுகாக்கும் எனவும் கருதினார்
இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து பலர் விமர்சனங்களை முன் வைத்த போதிலும் அது குறுகியகால நீண்ட கால நோக்கங்களை அடைய உதவியது, எனினும் அதன் நோக்கம் சாத்தியமாவதற்கு பல வருடங்கள் நீடித்தன.
ஆனால் இதற்காக பெரும் விலையை செலுத்த வேண்டியிருந்தது :ராஜீவ் காந்தியின் பெறுமதி மிக்க உயிர் எனத் தெரிவித்துள்ளாா்.







