ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்.!
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங் களில் மகாவலி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் அடாவடிகள் மற் றும் அட்டூழியங்களினால் தமிழ் மக் கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு நேரமொன்றை பெற்றுத் தருமாறு கோரிய போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு நேரம் ஒதுக்க மறுத்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்துள்ளாா்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே அடுத்து வரும் தேர்தல்களின் போதும் தமிழ் மக்களே தீர்மானம் எடுக்கும் சக்தி யாக இருப்பார்கள் என்பதனை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு மேலும் தெரிவித்துள் ளாா்.
மகாவலி திட்டத்தின் ஊடாக ஒரு சொட்டு நீர் கூட 1988 ஆம் ஆண்டும் முதல் இன்று வரைக்கும் முல்லைதீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு வர வில்லை. அதற்கான நடவடிக்கைகளை கவனத்தல் எடுக்கவில்லை.
மேலும் மகாவலி திட்டத்தை வைத்து இவ்விரு மாவட்டங்களில் புதிய குடி யேற்றங்களையே மகாவலி அவிருத்தி அதிகாரம் கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் காணி உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படவில்லை. ஆனால் சிங் களவர்களுக்கு மாத்திரம் முழுமையாக வழங்கப்படுகின்றன.
ஆகவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை சிங்களவர்களுக்கு மாத்திரம் உரியதா?. முல்லைதீவு பிரதேச செயலக பிரிவொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சிங்களவர்களை வெளியேறுமாறு கூறிய போதும் மகாவலி அபி விருத்தி அதிகார சபை சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரத்தை வழங் கியுள்ளது.
தமிழர்களின் பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் மீதே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றது. இந்நிலையில் நான் இன்று (நேற்று) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்தில் சந்தித்தேன்.
இதன்போது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் அட்டூழியங் களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எடுத்துரைப்ப தற்கு நேரமொன்றை பெற்றுதருமாறு கோரிய போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு நேரம் ஒதுக்க மறுத்து விட்டார்.
மகாவலி அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் என்ற வகையிலேயே அவரிடம் நான் அனுமதி கோரியிருந்தேன். ஆனால் இராஜாங்க அமைச்சருடன் இது தொடர்பாக பேசுமாறு தன்னிடம் கூறினார்.
இவ் விடயத்தில் சிங்களவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தனது வாக்கு வங்கி குறைந்து விடும் என்று ஜனாதிபதி நினைக்கின்றார் போலவே உள்ளது.
அரச வேலைவாய்ப்புகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கூட செய்யாத அநீதிகளையே இந்த அரசாங்கம் செய்கின்றது. முன் னைய ஆட்சி காலத்தில் அவர்களது கட்சிக்கார்களுக்கு வழங்கப்பட்டாலும் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கே வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது வன்னி மாவட்ட அரச நியமனங்களுக்கு குருநாகல், அநு ராதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படுகின்றன.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே அடுத்து வரும் தேர்தல்களின் போதும் தமிழ் மக்களே தீர்மானம் எடுக் கும் சக்தியாக இருப்பார்கள் என்பதனை ஜனாதிபதியும் அரசாங்கமும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறவில்லை. தமிழ் மக்களே தீர்மானம் எடுத்து வாக்களித்தனர். ஆனால் தற்போது தமிழ் மக்கள் விரக்தி யில் உள்ளதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.








