Breaking News

நில அபகரிப்பை எதிர்த்து முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபையின் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்னிட்டு மகாவலிக்கு எதிரான தமிழர் மர புரிமை பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முல் லைத்தீவில் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. 

மகாவலி அதிகார சபையினால் முல் லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக் குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது. 

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத் தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளதினால் மகா வலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப் பத்திரங்களை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென 3 அம்ச கோரிக்கையை முன்னிட்டு  மாபெரும் ஆர்ப் பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.