நுண்கடன் நிதியை அரசாங்கம் செலுத்துவதாக தீா்வு - மங்கள
வடக்கு, கிழக்கு உட்பட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக நுண் நிதி கடன் பெற்றவர்களின் கடனை கடந்த புதன்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஐந்து வருடங்களுக்குள் அரசாங்கம் செலுத்துவதாகத் தெரிவித்துள் ளது.
இதன்படி நிதி நிறுவனங்களுக்கு இத ற்கான கடிதத்தை செப்டெம்பர் மாதம் அனுப்பி வைக்கப்படுமென நிதியமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள் ளார்.
அவர் இது குறித்து கூறுகையில், வடக்கு, கிழக்கு உட்பட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக நுண் நிதி கடன் பெற்றவர்களின் கடனை புதன்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஐந்து வருடங்களுக்குள் அரசாங்கத்தினால் செலுத்துவதாகத் தீர்மானம் எடுத்துள்ளோம்.
இதன்படி நிதி நிறுவனங்களுக்கு இதற்கான கடிதத்தை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி அனுப்பி வைப்போம். நுண்நிதி கடனினால் அதிகளவில் தற்கொலைகளும் நடைபெற்றுள்ளன. வரட்சியினால் பாதிக்கப்பட்ட பெண்களு க்கு நாம் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்.
தற்போது 75 ஆயிரம் பெண்கள் ஒரு இலட்சத்துக்கு குறைவான கடனை பெற்றுள்ளனர். ஆகவே பெண்களுக்கே முன்னுரிமை வழங்கவுள்ளோம். அத்துடன் வட்டி வீதத்தை முழுமையாக நீக்கவுள்ளோம். இவ்வருடம் ஜூன் மாதத்தின் 30 ஆம் திகதி வரையாகும்போது அதற்கு முன்னர் மூன்று மாதங்கள் வரை கடன் செலுத்த முடியாதவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவோம்.
நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றோரின் பட்டியலை இம்மாத இறுதிக்குள் பெற்றுத்தருமாறு கோரியுள்ளோம். பட்டியல் கிடைத்ததும் பட்டியலில் உள்ள நபர்கள் உயிருடன் உள்ளனரா?
என்பதனை பற்றி அறியவும் மேலும் குறித்த நபர்களின் தகவல்களை உறுதிப்படுத்தவும் மாவட்ட செயலகங்களுக்கு இப் பட்டியலை அனுப்புவோம். அதன் பின்னர் செப்டெம்பர் மாதம் அளவில் நிதி அமைச்சினால் கடனை நீக்குவதற்கான கடிதத்தை நிதி நிறுவனங்களுக்கு அனுப்புவோம்.
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் நுண்நிதி கடனின் பாதிப்பை குறைப்பதற்கு கடனுக்கான வட்டியை 35 வீதத்திற்கு மட்டுப்படுத்த நிதி நிறுவனங்களு டன் இணக்கத்திற்கு வந்துள்ளோம்.
அதேபோன்று நுண்நிதி கடனை தவணைப் பணத்தை பலவந்தமாக பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடக்கில் ஆவாகுழு செயற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆகவே நுண்நிதி கடன் பாதிப்பினை குறைப்பதற்கான புதிய சட்டங்களை விரைவில் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளாா்.