திருகோணமலையில் யானைகளின் அச்சுறுத்தல் தீர்வு காண வேண்டும் -சம்பந்தன்
திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித் துள்ளனா்.
அவ்வாறு பாதிக்கப்படும் மக்களைப்பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண் டுமென எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
திருகோணமலைக்கு நேற்றைய தினம் விஜயமாகிய அமைச்சர் பீல்மார்சல் சரத்பொன்சேகாவிடமே இக் கோரிக்கையை விடுத்துள்ளதுடன் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றுக்காலை நடந்த வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய கூட்டத் தில் கருத்துத் தெரிவித்த சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்....,
கடந்த காலங்களில் கிராம மக்கள் வன விலங்குகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கிராமங்களைச்சார்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குச்சவெளி பிரதேச செலகபிரிவல் உள்ள தென்னமரவாடி .திரியாய்போன்ற கிராமங்களிலும்.திருகோணமலை பட்டணம் பிரிவில் உள்ள வில்கம்விகாரை, கப்பல்துறை, கன்னியா மற்றும் சேருவில போன்ற பிரதேசங்களிலும் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளன.
பல மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது வாழ்வாதாரங்களை செய்கை பண்ண முடியாதுள்ளனர்.
எனவே இப் பிரச்சினைக்கு முறையான தீர்வு காணப்பட வேண்டும். யானைகளைத் தடுக்க வேலிகள் வேகமாக அமைக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் விடயங்களிலும் கூடிய கவனமெடுக்க வேண்டியுள்ளது. விரைவில் மாவட்டத்தில் பாதிக்கப்படும் இடங்களில் யானை வேலிகளை அமைக்க அமைச்சு நிதிகளை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட திருகோணமலை பட்டணமும் சூழ லும் பிரதேச சபையின் தவிசாளர் டாக்டர்.ஜீ.ஞானகுணாளன் குறிப்பிடுகை யில்,
திருகோணமலைக்கு அழகைத்தருவது நகரிலும் கோணேசர்கோயில் பகுதியிலும் வாழும் மான்களாகும். அவைமுறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதற்கான இடமும் இல்லை. இதனால் நகரில் கொட்டப்படும் மரக்கறிகழிவுகள் உள்ளிட்ட பலவற்றை அவை உண்கின்றன. இதனால் அவை பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன.
எமது நாட்டின் அழகான இந்த மான்களைப்பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவிக்கையில்....
நான் நாட்டின் யுத்தத்தை தலைமை தாங்கி முடிவுக்கு கொண்டு வந்தேன். அதற்கான வசதிகளும் வழங்களும் இருந்தன.
அதனால் அதனை செய்யமுடிந்தது. இப் பிரச்சினைகளையும் ஒரு தேசியப் பிரச்சினையாக கருதி பல நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். எமது இந்த வனஜிவராசிகள் திணைக்களத்தில் போதுமான வளங்கள் இல்லை. ஆளணிகளும் இல்லை.
சிலர் நல்ல முறையில் செயற்படுகின்றனர்.
சிலர் பணத்தை வேண்டிவிட்டு முறையற்று செயற்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே இந்த யானைத் தாக்குதல் பிரச்சினையைத் தடுக்க யானை வேலியே ஒரு வழிமுறையாகும்.
தற்போதுள்ள முறையிலும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றைச் சீர்செய்து முறையான திட்டத்தை வகுத்து இதற்கான தீர்வை திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கமைவாக நாம் காண்போம்.
அதுமட்டுமன்றி சுமார் 3000 தொண்டர் உதவியாளர்களை நியமித்து யானை வேலி உள்ளிட்ட விடயங்களை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மான்களின் பிரச்சனைகளைப் பொறுத்தவரை அவற்றிக்கான காணி குறைந்தது 25 ஏக்கராவது தேவை ஏற்படும். அதற்கான முறையான இடம் மற்றும் திட் டங்கள் பற்றி ஆராய வேண்டியுள்ளதாக பதிலளித்துள்ளாா்.
எது எப்படியாயினும் இவ் வருடம் முடிவதற்குள் தேசிய ரீதியில் யானைக ளின் அச்சுறுத்தலுக்கு 90 வீதமான தீர்வு காணப்படுமெனத் தெரிவித்த அவர் இதற்கு பலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாமஹுரூப், க.துரைரெட்ணசிங்கம், உள்ளிட்ட பல உயரதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிக ளும் கலந்து சிறப்பித்துள்ளனா்.









