Breaking News

"தமிழ்த் தேசியம் என உரைப்பதுடன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட முடியாது"

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாவும் சிங்கப்பூர், இந்தியா, சீனா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயனுள்ளதைத் தவிர, நாட்டிலுள்ள மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாத நிலையே தோன்றியுள்ளது. 

இந் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பினை உணர்த்தும் வகையில் 'கொழும்பிற்கு மக்கள் சக்தி" எனும் மாபெரும் மக்கள் எழுச் சிப் போராட்டத்தினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முன் னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலை மற் றும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் என்பன தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று பத்தரமுல்லையின் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கூட்டு எதிர ணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பில் கூட்டு எதிரணியின் பிரதி நிதிகளால் மேற்கண்டவாறு விவ ரிக்கையில் பொதுஜன பெரமுன உறுப்பினரும் எலிய மற்றும் வியத்மக அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான அருண் தம்பிமுத்து கருத்து தெரிவிக்கையில்.....,

"தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்க ளின் விலை உயர்வடைவதோடு, மக் களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சிய டைந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே அரசாங்கம் சிங்கப் பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத் தில் கைச்சாத்திட்டுள்ளது. 

இதன்மூலம் சிங்கப்பூருக்கு 10 மில்லி யன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் அதே வேளை, இலங்கைக்கு எவ்வித அனு கூலங்களும் இல்லை. நாட்டின் தேசிய சொத்துக்களை வெளி நாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளிலும் அரசு செயற் படுகின்றது. 

அம்பாந்தோட்டை துறைமுகம் இந்து சமுத்திரத்திலும், தெற்காசியப் பிராந்தி யத்திலும் கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகத் தளமாகும். அதனைச் சீனாவிற்கு விற்றுள்ளாா்கள்.  

இவ்வாறு தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது நாட் டின் அனைத்துப் பிரஜைகளையும் பாதிக்கும் செயற்பாடாகும். இவை அனைத் தையும் விட மக்களின் ஜனநாயக உரிமையை மீறும் வகையில் இன்னமும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்துள்ளது. 

அதேபோல் எதிர்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு மாத்திரம் தலைவரல்ல. அவர் இந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவர் என்பதையும் மனதி லிருத்திச் செயற்பட வேண்டும். 

இரவில் அரசாங்கத்தோடு இணைந்திருந்து விட்டு, பகலில் மாத்திரம் எதிர்க் கட்சியாக இருப்பதில் அர்த்தமில்லை. தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடியாது. 

எனவே இந்த அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிக்காட்டும் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியில் நாட்டை நேசிக்கும் அனைவரும் கலந்து கொள் வார்கள்" என்றார். 

தொடர்ந்து மலையக தேசிய முன்னணியின் தலைவரும், பொதுஜன பெரமுன வின் தமிழ்ப்பிரிவு பொறுப்பாளருமான ரிஷி செந்தில்ராஜ் குறிப்பிடுகையில், "இந்த அரசாங்கத்தில் நாடு முழுவதுமாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் உள் ளது. 

அண்மையில் புகையிரத ஊழியர் வேலைநிறுத்தம், தனியார் பஸ் உரிமையா ளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் போன்றன இடம்பெற்றன. இவற்றால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவை அனைத்திற்கும் பொது எதிரணி காரணமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அதனை நிறுத்தி விட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை செலு த்த வேண்டும்" என தெரிவித்த இவ்விடயம் தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜு பாஸ்கரன் கருத்துரைத்துள்ளாா். 

 "2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்த கட்சியை விட்டுவிட்டு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலை வருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கிய போதே இந்த அரசாங்கம் ஜனநாயக மரபை மீறி செயற்பட்டுள்ளது. 

தற்போது வரை மக்களின் தேவைகளைக் கவனத்திற் கொள்ளாமல் செயற் படும் இந்த அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மக்கள் எழுச்சிப் போராட் டத்தை செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம்." எனத் தெரிவித் துள்ளாா்.