Breaking News

வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மீதான வழக்கு மீண்டும் இழுத்தடிப்பு.!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை விடயமாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழி லாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியதுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக் கள அதிகாரிகளுக்கு தமது கோரிக் கைகளை முன்வைக்கச் சென்ற போது, நீண்டநேரம் ஆகியும் திணைக் களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக் களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது. 

அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில்; முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இதில் வடக்கு மாகாண சபை உறுப் பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப் பட்டதுடன், குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், இன்றைய தினம் தவணைக்கு அழைத்துள்ளனா்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும் இன்று வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு தவணை பிற்போடப்பட்டுள்ளது.