முன்னாள் போராளிகளுக்கு பட்டதாரி நியமனம் வழங்கியதாக - வடக்கு ஆளுநர்
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போரா ளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டது சமாதானத்திற்கான ஒரு படியாக அமைவதாக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித் துள்ளார்.
புலிகள் அமைப்பிலிருந்து இறுதிக் யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின் பின் தமது உறவினர் களுடன் இணைந்தவா்களில் பட்டதா ரிகளாகக் காணப்பட்ட பலர் கடந்த 2017 ஆரம்பத்தில் சுண்டுக் குளியில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் என்னைச் சந்தித்து ஒரு கோரிக்கை யினை விடுத்திருந்தனா்.
அதாவது பட்டதாரிகளுக்கான அரச பணி நியமனங்களில் தமது பெயர்க ளும் பெற வேண்டும் என்பதாகும்.
அதற்கு அமைய கடந்த 2017.07.26 அன்று அமைச்சர் சுவாமிநாதனுக்கு நான் எழுத்து மூலம் முன்வைத்த ஆலோசனையினை ஏற்று கௌரவ அமைச்சர் அமைச்சர வைபவ பத்திரத்தினை முன் வைத்து நிறைவேற்றி இப்போரா ளிகளுக்கும் நேற்று அரச பணி நியமனத்தினை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன் ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பட்டதாரிகள் நியமனத்தில் உள் வாங்கப்பட்டு அரசபணிக்கு அமர்த்தப்பட்டார்கள். மேலும் இரண்டாம் கட்ட மாக நேற்றைய தினம் 30 புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரசபணிக்கு அமர்த்தப்பட்டுள்ளாா்கள்.
சமாதானத்திற்கு இது ஒரு முன்னேற்றகரமான சம்பவமாக அமைக்கின்றது. இதுபோன்று மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச சேவைகள் கிடைக்க எனது முழு ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கான அரச நியமனங்கள் அலரி மாளிகையில் நேற்று (20) பிர தமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.








