“திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு வழங்க அரசு தீர்மானம்”
திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு வழங்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.
வெளிநாட்டு கடன்களை மீள் செலு த்துவதற்காக தேசிய வளங்களை விற்கும் அளவிற்கு முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தை அரசாங்கம் பின் பற்றுவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலை வர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றம் சுமத்தியுள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டை துறைமுகம் , மத்தள் விமான நிலையம் உள்ளிட்ட தேசிய வளங்களில் வருமானத்தை விட செலவுகளே அதிகமாக காணப்படுகின்றது என்று அரசாங்கம் குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது விடயம் அம்பாந் தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப் பட்டுள்ளது.
இருப்பினும் இக்காலக்கட்டத்தில் சீனாவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும். தற்போது அரசாங்கம் மத்தள விமான நிலை யத்தை இந்நியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது.
இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமானமாக உருவாக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தின் வருமானங்களை விட செலவுகளே அதிகமாக காணப் படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றமையானது கடந்த அரசாங்கத்தின் மீதான பழி வாங்கும் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றது.
மஹிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பலவீனமானது என்று குறிப்பிட முடியாது. மத்தள விமான நிலையத்தை இலாபம் பெறும் நிறு வனமாக மாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு இதற்காக பிற நாட் டிற்கு எமது நாட்டு வளங்களை வழங்க தீர்மானிப்பது அரசாங்கத்தின் பல வீனமாக முகாமைத்துவ கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.
அம்பாந்தோட்டை, மத்தள விமான நிலையத்தின் மீதான அரசாங்கத்தின் நோக்கம் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது திருகோணமலை துறை முகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
திருகோணமலை துறைமுகம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நிர்மாணிக்கப் பட்டது அல்ல அத்துறைமுகம் ஒரு இயற்கை துறைமுகம் அரசாங்கம் அத னையாவது விட்டு வைக்க வேண்டும்.
அமெரிக்க இராணுவத்தினரது நடவடிக்கைகளுக்கு திருகோணமலை துறை முகத்தினை வழங்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ் விடயத்தில் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை சுட்டிக்காட்டுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன் இரா ணுவ விவகாரம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றியை செய்துக் கொண்டார் அத வாது அமெரிக்க இராணுவ படையினர் இலங்கையில் இராணுவ முகாம்களை அமைத்து தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
குறித்த கால கட்டத்தில் இவர்களுக்கு இலங்கை அரசாங்கமே அனைத்து செல வுகளையும் செய்ய வேண்டும் என்று குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட் டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது முற்றிலும் பொய்யான விடயமாகும் இலங்கை இராணுவத்தினருக்கு குறித்த காலத்தில் இராணுவ பயிற்சிகளை வழங்க மாத்திரமே ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது அரசாங்கம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணங்கியுள்ளமை பாரிய எதிர் விளைவுகளை தோற்றுவிப்பதாகவே காணப் படும்.
இந்நியா, சீனா, போன்ற நாடுகளை போன்று அமெரிக்கா மனித நேயம் கொண்ட நாடல்ல தங்களின் நாட்டின் நலன்களை மாத்திரமே கருத்திற் கொள் ளும் திருகோணமலை துறைமுகம் சர்வதேச கடற்பரப்பில் முக்கிய இடத் தினை வகிக்கின்றது.
ஆகவே இத்துறைமுகத்தினை அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளு க்கு வழங்க அரசாங்கம் முயற்சித்துள்ளது.