அதிரடிப்படைத் தளபதி மீது சரத்பொன்சேகா குற்றச்சாட்டு.!
இலங்கையின் விசேட அதிரடிப்படையின் தளபதிக்கு எதிராக முன்னாள் இரா ணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா முன்வைத்துள்ள குற்றச் சாட்டுகளால் பரபரப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உரையில் குற்றம் சுமத் தியுள்ளாா்.
நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை சில பொலிஸ் அதிகாரி கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என சரத்பொன்சேகா தெரிவித்துள் ளார்.
சைனா கடையில் புகுந்த எருமை மாடுகள் போல அவர்கள் நடந்துகொள்வதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையின் தளபதியான பிரதிபொலிஸ்மா அதிபர் லத்தீவ் உட்பட சில பொலிஸ் அதிகாரிகள் மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத் துள்ளார்
லத்தீவ் சைனா கடையில் புகுந்த எருமை மாடு போன்று நடந்து கொள்கின்றார்.
அவர் எனது ஆதரவாளர்களான இளைஞர்களை துன்புறுத்துகின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியை சேர்ந்த எனது ஆதரவாளர் ஒரு வரை போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எனது ஆதரவாளரின் வீட்டை சோதனையிட்டனர் தங்களிற்கு தக வல் கிடைத்தாகத் தெரிவித்தே அவர்கள் சோதனையை மேற் கொண்டதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களால் அந்த வீட்டிலிருந்து எதனையும் கண்டுபிடிக்க முடிய வில்லை பின்னர் அந்த வீட்டிலிருந்து 80 மீற்றர் தொலைவிலுள்ள ஆற்று கரை யோரத்திலிருந்து கொக்கெய்னை மீட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதற்கு சில நாட்களிற்கு பின்னர் மீண்டும் அந்த வீட்டை மீண்டும் சோதனை யிட்ட பொலிஸார் அந்த வீட்டில் குண்டு தயாரிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி யுள்ளனர், ஆனால் பழைய கைக்குண்டையே மீட்டுள்ளனர்.
எனது மற்றுமொரு ஆதரவாளர் இயந்திரங்களை வாடகைக்கு விடுபவர் அவர் தன்னிடம் இயந்திரங்களை வாடகைக்கு பெறும் வாடிக்கையாளர்களின் அடை யாள அட்டையை வாங்கி வைப்பது வழக்கம் இந்நிலையில் அவரிடம் பல அடையாள அட்டைகள் இருந்ததாக தெரிவித்து அவரை கைது செய்துள்ளனர் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளர்.
இந்த கைதுகள் அனைத்திற்கும் விசேட அதிரடிப்படையின் தளபதி லத்தீவ் காரணம் எனவும் சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
நான் இந்த விட யத்தை சட்டமொழுங்கு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் அப் பாவிகளை துன்புறுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொண்டேன் எனினும் லத்தீவ் தொடர்ந்தும் அப்பாவிகளை துன்புறுத்துவதாக சரத்பொன்சேகா தெரி வித்துள்ளார்.
பொலிஸாரை ஒழுங்குடன் செயற்பட விடாது நடந்துகொண்டால் நல்லாட்சி என கோசமிடுவதில் அர்த்தமில்லையென சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.