விடுதலைப்புலிகளின் இலட்சியம் உயிர் வாழ்கின்றது - பொலிஸ் மா அதிபர்.!
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது இலட்சியம் மேலும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக என மலேசியாவின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் டன் சிறி முசா ஹசன் தெரிவித்துள்ளார்.
மலேசியா ஊடகமொன்றிற்கு வழங் கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவரகளது கொள்கை தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றது அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பலர் உலகின் பல பகுதிகளில் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
இதனால் மலேசியா உட்பட எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் சேர்த்துள்ளன மேலும் 32 நாடுகள் அந்த அமைப்பை தடை செய்துள்ளன. இதனால் அந்த அமைப்பினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை இலகுவாக கருத முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.