விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு - மஹிந்த.!
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியின் அழைப் பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்றைய தினம் டெல்லியில் கருத்துரைக்கையில் இவ்வாறு உரைத்துள்ளாா்.
இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக சர்வதேச ரீதியில் நடைபெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
அத்துடன் நாங் கள் ஒருபோதும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவில்லை.
இராணுவ நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது தமிழ் சமூகத்துக்கு எதிராக இயங்கவில்லை.
மேலும் ரஜீவ்காந்தி மற்றும் மேலும் பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவிருந்த இந்த பயங்கரவாத அமைப் பானது இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் அது அச்சுறுத்தலாக அமைந்ததாக குற்றம் சுமத்தியுள்ளாா்.








