யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சாதனை.!
தேசிய மட்டத்திலான 18 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி நே.டக்சிதா புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியில் நே.டக்சிதா 3.02 மீற்றர் உயரத்தை பாய்ந்து புதிய சாதனை நிகழ்த்தி தங்க பதங்கை தனதாக்கியுள்ளாா்.
கடந்த வருடம் யாழ். தெல்லிப்பளை கமாஜனக் கல்லூரி மாணவி ஹெரீனா 3.01 மீற்றர் உயரத்தை பாய்ந்து சாதனை படைத்திருந்தார். அச் சாதனையை நே.டக்சிதா 3.02 மீற்றர் பாய்ந்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். மேலும் 2.90 மீற்றர் உயரத்தை பாய்ந்து ஹெரீனா வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கி யுள்ளாா்.
இம் மாணவிக்கு எமது இணையம் சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக் களையும் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம்.