Breaking News

தமிழர் பகுதிகளை மீளமைப்பதற்கு இந்தியா ஆதரவு நல்க வேண்டும் ; துரைராஜசிங்கம்

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வு கிடைப்பதற்குத் தேவையான அழுத்தங்களை இந்தியா வழ ங்க வேண்டுமென தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜ சிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முறையாக விஜயமாகியுள்ள இல ங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்க ளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பாசிக்குடாவில் நடைபெற் றுள்ளது. 

கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள் ளன. 

மேலும், குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தமிழர் பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியா ஆதரவினை வழங்க வேண்டு மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட தாகவும், அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படுமென உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளாா். 


மட்டக்களப்பில் இந்திய தூதரகத்தின் உப அலுவலகம் ஒன்றையும் திறக்கு மாறு தாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன் இச்சந்திப்பில், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன், க.கோடிஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபை தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோா் கலந்து சிறப்பித் துள்ளனா்.