Breaking News

கூட்டமைப்பிலிருந்து சி.வி. விலகுவதாக குற்றச்சாட்டு - டெனீஸ்வரன்.!

விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தற்போது அவரது அமைச்சர்களாக உள்ள  நால்வரும் துணை போவதாக வடமாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளாா். 

என்னூடாக முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராளுமன்ற உறு ப்பினர் சுமந்திரன் பழி வாங்குவதாக அரசியல் மட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என்பதுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளின் பின் ஊடகங்களிற்கு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.