Breaking News

புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் பொது எதிரணி முரண்படலாம் - லக்ஸ்மன் கிரியல்ல

புதிய அரசியல் அமைப்பு குறித்த நகல் வரைபை வெகு விரைவில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். 

இந்த நகல் வரைபு குறித்து இரண்டு நாட்கள் விவாதமும் வழங்கப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவிக்கையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து பொது எதிரணி முரண்படலாம் ஆனால் அர சாங்கம் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொது எதிரணி உறுப்பினர் உதய கம்மன்பில அரசியல் அமைப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.