Breaking News

மக்கள் ஆதரவு இல்லையென்றால் அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது?....

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு பொது எதிரணியினர் புதன் கிழமை கொழும்பை மையமாக வைத்து நடத்த தீர்மானித்துள்ள பாரிய பேரணி குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தீவிர கவனம் எடுத்துள்ளனா். 

பொது எதிரணி பெருமளவு மக்களை பேரணிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை அரசாங்கம் அதனை தடு ப்பதற்கான வழிமுறைகளை ஆராய் ந்து கொண்டிருக்கின்றது. 

இந்த மோதலில் யாருக்கு வெற்றி என்பது அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் தெரிந்துவிடுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். பேரணிக்கு மக்கள் அழைத்து வரப்படுவதை தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக 8ம் திகதி வரை தனியார் பேருந்து உரிமையாளர்கள் விசேட பேருந்து சேவைகளை நடத்துவதற்கு மேல்மாகாண போக்குவரத்து அதிகார சபை தடை விதித்துள்ளது. 

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் உத்தரவை மீறுபவர்களின் வழித்தட அனுமதிகள் இரத்துச் செய்யப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அரசாங்கத்திடமிருந்து மேலும் இதுபோன்ற பல அறிவிப்புகள் வெளியாகலாமென எதிர்பாா்க்கப்படுகின்றது. 

தனியார் பேருந்து உரிமையாளர்களிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆதரவாளர்களை கொழும்பிற்கு கொண்டுவருவதற்கு உதவ வேண்டாம் என அவர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என தினேஸ் குண வர்த்தன தெரிவித்துள்ளார். 

சிலர் ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டுள் ளனர் எங்களிற்கு மக்கள் ஆதரவு இல்லையென்றால் அரசாங்கம் ஏன் அஞ்சுவதாக அவர் கேள்வி எழுப்பி யுள்ளார். 

கொழும்பில் நடைபெறவுள்ள பேரணி யின் முக்கிய கோரிக்கையாக தேர் தல்கள் உரிய நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதே காணப்படும், அர சாங்கம் மாகாணசபை தேர்தலிற்காக தயாராவதை நாங்கள் இன்னமும் காண வில்லையென தினேஸ் குணவர்த்தன் தெரிவித்துள்ளாா். 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்துவோம் பாண் விலை அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்துவோமெனத் தெரிவித்துள்ளாா்.