நாளை இலங்கை விஜயமாகின்றாா் ஐ.நா. சிறப்பு நிபுணர்.!
ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் சாா்பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி நாளை திங்கட்கிழமை இலங்கை விஜயமாகவுள்ளாா்.
எதிர்வரும்11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் என பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் மற் றும் நாட்டின் கடன் உள்ளிட்ட விடயங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையில் சமர்ப்பிப்பதே தனது கடமையாக உள்ளதாக சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி இலங்கை விஜயம் தொடர்பில் கரு த்து தெரிவித்துள்ளார்.
போரின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பரந்தளவிலான சந்திப்புகளை மேற்கொள்ள சிறப்பு நிபுணரின் நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அரச தரப்பினர்களுக்கு அப்பால் சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துலக சமூக பிரதிநிதிகள், பங்காளர்கள் உள்ளிட்டவர்களுடன் தான் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் மேலும் இவ் விஜயத்தின் முடி வில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
வடக்கு அல்லது நாட்டின் ஏனைய சில பகுதிகளுக்கான விஜயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உள்நாட்டு போரில் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போதைய நிலைமைகள் தொடா்பாக ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.