தேசிய பாதுகாப்பான பொய்யான தகவல்கள் பரவுவதாக - ருவான் விஜயவர்த்தன
தேசிய பாதுகாப்பு குறித்து உள்நோக்கத்துடன் சிலர் ஆதாரமற்ற பிழையான கருத்துக்களை வெளியிடுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளாா்.
2015இல் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்னர் தேசிய பாதுகாப்பு குறித்து பிழையான கருத்துக்களை பரப்புவது குறித்து குழுவொன்று தீவிரமாக ஈடு பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பாதுகாப்பு குறித்து ஆராய் ந்த முன்னரே முக்கிய முடிவுகளை எடுக்கின்றது,தேசிய பாதுகாப்பிற்கு அர சாங்கம் எப்போதும் முன்னுரிமையளிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித் துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என மக்கள் மனதில் சந்தேகத்தையும் பயத்தையும் விதைக்கும் முயற்சியில் அதிகார வேட்கை கொண்ட அரசியல்வாதிகள் சிலர் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள் ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெறுவதாகத் தெரி வித்துள்ளாா்.








