Breaking News

மக்களின் வீட்டிற்குள் புகுந்த இராணுவ வீரர்கள் மக்களின் கைகளில் சிக்கினா்.!

பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் தம் கைகளில் சிக்க வைத்துள் ளனா். 

இன்று அதிகாலை வீடு புகுந்த இராணு வத்தினரை கண்டு அச்சத்தில் சத்த மிட்ட வீட்டு உரிமையளர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இரா ணுவத்தினரை பிடித்து பொலிஸாரிடம் ஒப் படைத்துள்ளனர்.

இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத் துடன் தெரி விக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொது மக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள் ளனர். 

மக்கள் குடியிருப்புக்குள் இரணுவ முகாம் இருப்பதால் மக்கள் பெரும் அசௌ கரியங்களை சந்திக்கின்ற நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் மேலும் அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங் காவில் பொலிசார் முன்னெடுத்துள்ளனா்.