Breaking News

புதிய அரசியல் யாப்பை பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் - சம்பந்தன்

இனப்­ பி­ரச்­சி­னைக்­கான அர­சி­யல் ­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­ யாப்பை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு இந்­தியா உத­வி­ பு­ரி­ய­வேண் டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்­க ­வேண்டுமென தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­ மோ­டி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

அர­சியல் யாப்பை உரு­வாக்கும் முயற்சி தோல்­வியில் முடி­வ­டை­யு­மானால் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பை விட தீவி­ர­மான போக்கைக் கொண்ட தமிழ் தலைமை உரு­வா­வ­தற்கும் வாய்ப்பு ஏற்­படுமென சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

இந்திய சென்றுள்ள சர்வக் கட்சிக்குழு நேற்று இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­ மோ­டியைச் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. இப்­ பேச்சு­வார்த்­தை­யின் ­போதே எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.