ஐ.நா குழுவின் கேள்விக்கு இலங்கையிடமிருந்து பதிலில்லை.!
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கைக்கு இல ங்கை அரசாங்கம் உரிய காலத்தில் பதில் வழங்காதையிட்டு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற சித்திரவதைகள் தொடர்பாகவும் சித்திரவதைகளுக்கும் முன்னாள் சிஐடி தலைவரிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதிப்பொறி முறையொன்றை உருவாக்குமாறு ஐக்கியநாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.
ஐக்கிய நாடுகள் குழு இது தொடர்பாக மேலதிக விபரங்களை சமர்ப்பிக்குமா றும் கோரியுள்ளது.
ஐக்கியநாடுகளின் குழுவினர் கோரிய தகவல்களை வழங் குவதற்கான காலம் முடிவடைந்து ஒரு வருட காலமாகி விட்ட நிலையிலும் இன்னமும் பதில் வழங்கப்படவில்லையென இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஐ.நா குழு தெரி வித்துள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தொடர்பான குழு வின் 59 அமர்வில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை 2017 டிசம் பர் வரை இதற்கு பதில் அளிப்பதற்கான கால அவகாசத்தை ஐநா குழு வழங்கி யுள்ளது.
இலங்கை அரசாங்கம் கால அவகாசம் முடிவடைந்து பல மாதங்களாகி விட்ட போதிலும் இன்னமும் அதற்கு பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரங்களை கையாளும் விசேட அறிக்கையாளர் இலங்கையிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததை உறுதி செய்துள்ளதுடன் இது குறித்து பதில் அளிக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.








