Breaking News

இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் -ஐ.நா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்க ளுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளாா். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப் புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பா ற்றுமென நம்புகிறோம் எனத் தெரிவித்துள் ளாா்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ரெஹாம் அல்பர்ரா புலமைப் பரிசில் ஊடகவிய லாளர்களுடனான கலந்துரையாடலில் கேட்கப் பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே  இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பில் ஐ.நா. வின் நிலைப்பாடு என்ன என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா். 

மேலும்

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங் கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது. சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம்.

இவ் விடயமாக நாம் தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்" ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதல் நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள் ளாா்.