Breaking News

ராஜித மகனின் திருமண நிகழ்விற்காக அலரிமாளிகைக்கு வழங்கிய பணம்.!

அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மஹிந்த தரப்பினர் விமர்சனங்களை பரப்பி வருகின்றனா். 

ஆனால் ‘அங்கீகரிக்கப்பட்ட சில விதி முறைகளுக்கு அமையவே, அதாவது வெளிவாரியான நிகழ்வுகளுக்கு வழங்கப் படுகின்ற கட்டணங்களுக்கு அமையவே குறித்த திருமண நிகழ்வு நடைபெற்றதாக சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்த மண்டபம் ஒன்று காணப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனா ரத்னவின் திருமணத்தை அலரிமாளிகை வளாகத்தில் நடத்துவதற்கு பிரதமர் அலுவலகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ் அனுமதியானது இலவசமாகவோ அல்லது மக்களின் பணத்தை முறை யற்ற வகையில் கையாளும் விதத்திலோ வழங்கவில்லை. இங்கு திருமணம் நடத்துவதற்காக 21 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

ஆனால் மஹிந்த தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மஹிந்த ராஜ பக்ஷவின் காலத்திலேயே அலரிமாளிகை தன்சலசாலை போன்று காட்சிய ளித்ததை மறந்து விட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.