ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்கு யார் காரணமென அறிய வேண்டும் - மகிந்த சமரசிங்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ குறித்து குற்றம் சாட்டியதாக ஊடகங்களிற்கு தகவல் வழங்கியவர்களை அம் பலப்படுத்த வேண்டுமென அமைச்சர் மகிந்த சமரசிங்க எச்சரிக்கை விடுத்துள் ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தி யாளர் மாநாட்டில் அவர் இவ் எச்சரிக் கையை விடுத்துள்ளார். அமைச்ச ரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரோ மீது எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்தவொரு விடயம் குறித்தும் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்பதே முழு அரசாங்கத் தினதும் நிலைப்பாடாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை குறிப்பிட்ட போலியான தக வல்கள் இந்திய இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான முயற்சி என்பதை தெளிவாக தெரிவித்துள்ளதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ் விவகாரம் ஒரு குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளதாக குறிப்பிட் டுள்ள அமைச்சர் இதற்கு காரணமானவர்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளார். யார் இதற்கு காரணம் என்பதை கண்டு பிடிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையென அமைச்சா் தெரிவித்துள்ளாா்.