Breaking News

வவுனியா நகரசபை அமர்வில் பரபரப்பு.!

வாகன நகர சபைக்கு புதிய வாகனம் கொள்வனவு செய்ய வேண்டுமென  தவி சாளர் இ.கௌதமன் சபையில் கருத்து தெரிவித்தையடுத்து சபையில் நீண்ட சர்ச்சை தீ எழுந்துள்ளது. 

வவுனியா நகரசபையின் இம் மாதத் திற்கான அமர்வு இன்று காலை தவி சாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வவுனியா நகரசபை யில் வாகனப் பற்றாக்குறை உள்ளதாகவும், தவிசாளர், உப தவிசா ளர், செயலாளர் ஆகியோர் பாவிப்ப தற்கு இரு வாகனங்கள் இருந்த போதும் அதில் ஒன்று அடிக்கடி பழுதடைவதால் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய சபையின் கவனத்திற்கு தவிசாளர் எடுத்துரைத்துள்ளாா்.

நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சபை அமர்வு கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயம் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்காத விடயத்தை உடனடியாக கொண்டு வந்து தீர்மானமாக நிறைவேற்ற முடியாது எனவும் நகர சபையில் உள்ள வாகனங்களை திருத்தி பயன்படுத்த வேண்டும்.

மேலதிகமாக புதிய வாகனத்தை கொள்வனவு செய்து நிதியை வீண் விரயம் செய்ய முடியாதெனத் தெரிவித்துள்ளாா். இக் கருத்தினை உறுப்பினர்களான ரி.கே.இராஜலிங்கம், க.சந்திரகுலசிங்கம் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனா்.

புதிய வாகனம் கொள்வனவு செய்வது என சபையின் ஒருவர் முன்மொழிந்து ஒருவர் வழி மொழிய முற்பட்ட போது உறுப்பினர்கள் சிலர் இது ஏகமனதான முடிவு அல்ல என தெரிவித்தையடுத்து வாக்கெடுப்புக்குச் செல்வதா என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் வாகனக் கொள்வனவு தொடர்பில் அடுத்த அமர்வில் விவாதித்து தீர்மானம் எடுப்பதாக முடிவு செய்யப்பட்டபோது கடந்த 11 ஆம் திகதி தவிசா ளர் குப்பை ஏற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்தமை அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு என உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனா்.