Breaking News

மாணவிகளுக்கு பாலியல் தொல்லையான ஆசாமி சி.சி.ரி.வியில் பதிவாகினாா்.!

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சி.சி.ரி.வி. பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபர், வீதியில் சென்ற மாணவி களுக்கு பாலியல் ரீதியில் கொடுமை செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே அவர் மீது நான்கு வழக்கு களை யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு வீதியில் வைத்து பாலி யல் ரீதியான தொல்லை விளைவித்தார் என்று கொட்டடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.