Breaking News

இலங்கையில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டத்தில் பயனில்லை - இந்தியா கவலை.!

இலங்கையில் இந்தியா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் மெதுவாக நகர்வதினால் இந்தியா கவலையடைந்திருக்கும் நிலையில் இலங்கை பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

இந்தியாவிற்கு விஜயமாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளாா். இருநாடுகளை பொறுத்த வரையிலும் இச் சந்திப்பு மிக அவசியமானதென அரசியல் வட்டாரங்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் இந்தியாவின் உதவியு டன் முன்னெடுக்கப்படும் அபிவிரு த்தி திட்டங்கள் மெதுவாகவே நகர்வதினால் இந்தியா கவலையடைந்துள்ள தாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதேவேளை தனது முக்கிய சகாக்களான இந்தியா சீனாவிற்கு இடையிலான உறவுகளில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண் டுள்ள இலங்கை இந்தியாவுனடான பிரச்சினைகளிற்கு தீர்வைக் காண முயல் வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது முன்னுரிமைக்குரிய திட்டங்களாக மத்தல விமான நிலையம், பலாலி விமானநிலையம்,திருகோணமலை எண்ணெய் குதம்,கொழும்பு துறை முகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம், போன்றவற்றை கருதுவதாக இந்துநாளிதழ் தெரிவித்துள்ளது.

இருதரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பொருளாதார வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கைகள் போன்றவற்றிற்கு மத்தியிலும் இந்த திட்டங் கள் முன்னோக்கி நகரவில்லையென இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

அரசியல் மற்றும் அதிகார மட்ட காரணங்களினாலேயே இந்தியாவின் உதவி யுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாகின்றன என கொழும்பைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்து நாளிதழ் தெரி வித்துள்ளது.

மத்தல மற்றும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் இந்தி யாவின் மூலோபாய நோக்கங்கள் நன்கு அறியப்பட்ட விடயம் என தெரி வித்துள்ள இந்து நாளிதழ் எனினும் கடந்த சில மாதங்களாக மத்தல விமான நிலையம் குறித்து இலங்கை முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வரு கின்றது.

இதன் காரணமாக மத்தல விமான நிலையத்தை இலங்கை இந்தியாவிடம் கையளிக்குமா என்ற ஊகம் எழுந்துள்ளது எனவும் இந்து நாளிதழ் தெரிவித் துள்ளது.

 திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இரு நாடுகளும் கொள்கை அளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையும் இந்து நாளிதழ் சுட்டிக் காட்டி யுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் பேச்சுவாா்த்தைகள் இந்தியாவின் உத வியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த உத வும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமரை கடந்த மாதம் சந்தித்த நிலையிலேயே இலங்கை பிரதமர் இந்திய பிரதமரை சந்திக்கவுள்ளார் என தெரிவித்துள்ள இந்து மகிந்த ராஜபக்ச மோடி சந்திப்பை பலரும் நட்புறவு மீண்டும் மலர்வதற்கான அறிகுறி தென்படுவதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.