பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்கு நூறு மில்லியன் ரூபா ஒதுக்கீடு.- சிறிதரன்.!
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பச்சிலைப் பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவ தாகவும் அதேவேளை கம்பரலிய வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச சபையின் தவிசாளருடன் கலந்துரை யாடி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஒன்பது வீதி புனரமைப் பதற்கு 180 மில்லியன் ரூபாயும் பொதுச்சந்தை புனரமைப்புக்கு 1 மில்லியன் ரூபாயும் ஆலயங்கள் புனரமைப்புக்கு 01 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள் ளதாக தெரிவித்துள்ளார்.








