Breaking News

சம்பந்தன் மீது குற்றச்சாட்டு - கருணா.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி என்பதுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நட வடிக்கை போன்று முட்டாள் தனமான நடவடிக்கையை எவரும் மேற் கொள்ள மாட்டார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன் னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் தெரிவித்துள்ளாா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தங் களின் சுகபோக வாழ்விற்காகவும், தங்கள் நலன்களுக்காகவும் பாராளு மன்றத்தைப் பயன்படுத்தாமல் எமது மக்களின் பொதுநலன்களில் அக் கறையுள்ளவர்களாகச் செயற்படுவா ர்களாக இருந்தால் அவர்களை உண் மையிலேயே நாங்கள் வரவேற்பதா கத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றமை தொடர் பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்துள்ளாா்.

மேலும் தெரிவிக்கையில்....,

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பல வாய்ப் புகள் இருந்தும் அவற்றையெல்லாம் நழுவ விட்டு மஹிந்த குடும்பத்தைப் பலிவாங்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாரே தவிர இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென  நினைக்கவில்லை.

அமெரிக்க டொலரிகன் விலை அதிகரிப்பானது ஒரு நாட்டின் முன்னேறாத நிலையினையே காட்டுகின்றது. பிச்சைக்கார நாடாக மாறுவதற்கான அறி குறிதான் அது. அத்துடன் மத்திய வங்கிக் கொள்ளை போன்ற பல விடயங்கள் இருக்கின்றன.

இன்று அவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் இந்த மாற்றம் ஏற் பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. இவ் வாய்ப்புக்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அனைத்து சிறுபான்மைக் கட்சிக ளும் அவருக்கு ஆதரவை வழங்க முன்வர வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.