Breaking News

சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது.!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன பகு தியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் மூவர் கைதாகியுள்ளதாகவும் ஏனைய மூவர் தப்பியோடி விட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினா் தெரிவித்துள்ளனர்.  

தலவாகலை விசேட அதிரடிப் படை யினருக்கு கிடைத்த இரகசிய தகவ லுக்கு இணங்க நேற்றிரவு பொக வந்த லாவ இராணி காடு மாவெளி வனப் பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய் யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நீண்ட காலமாக குறித்த வனப் பகுதியில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ் வில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனா்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்வுக்கு பயன்படுத்தப் பட்ட உபகரணங்களையும் கைப்பற்றிய விசேட அதிரடிப் படையினர் தப்பி யோடி உள்ளதால் மேலும் மூவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனா்.