Breaking News

அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் - சரத் பொன்சேகா!

ஸ்ரீலங்கா சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படுத்தப்பட்டு, அவர்கள் தொடர்பில் ஒரு தீர்க்கமான தீர்வு எட்டப்பட வேண்டுமென, ஸ்ரீலங்கா இராணு வத்தின் முன்னாள் தளபதியும், அமைச்சருமான பீல்;ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புக்களின் முக்கிய நபர்கள் உலகம் பூராகவும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொன்சேகா எனினும், தமிழ் அரசியல் கைதிகளைப்போல் இரண்டாம் நிலையில் இருந்தவர் களே சிறைக்கூடங்களில் வாடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர் கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சரத் பொன்சேகா பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடு தலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரே என" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சரத்பொன்சேகா இவ் விடயத்தை தெரிவித்துள்ளாா்.

முக்கிய அமைப்புகளின், முக்கிய நபர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள் ளார்கள். இரண்டாம் நிலையில் இருந்தவர்களே தற்போது சிறைக்கூடங்களில் உள்ளாா்கள்.

அவர்கள் உயிருடன் இருப்பதால் அவர்கள் சட்ட ரீதியான வழக்குகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். எனினும் அவர்களின் வழக்கு விசாரணைகள் துரி தப்படுத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்பதே  எனது எதிர்ப் பார்ப்பு.

அரசியல் ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்தி, அந்த விடயம் தொடர்பில் ஒவ் வொரு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருப்பதில் நியாயம் இல்லை.

இச் சந்தர்ப்பத்தில், ஊடகவியலாளர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து புதிய அர சாங்கம் ஒன்றை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக கேள்வி எழுப்பியுள்ளனா்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமெனின் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே இணைந்து அமைக்க வேண்டும்.

காரணம் ஐக்கிய தேசியக் கட்சியே அவரை அப் பதவியில் அமர்த்தியது. மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இந்த நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்கள். அவர்களை யாராவது அதிகாரத்திற்கு கொண்டுவர நினைப்பார்க ளாயின் அது கடந்த காலத்தில் மக்கள் வழங்கிய வரத்திற்கும் ஜனநாயகத்திற் கும் எதிரான ஒரு விடயமாகும்.

அது பொதுமக்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகமும் கூட. மஹிந்தவுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்பது ஜனநாயகத்துக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகவே அமையும். அரசியல் யாப்பிற் கும் அது முரணான விடயமே.

அதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்போது இல்லை. ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்ந்து அதிகாரத்தில் தக்கவைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதே என மற்றுமொரு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இந்த நாட்டின் அரசியலில் காணப்படும் குறைபாடு அதுதான். சிலர் பதவிக்கு வந்த பின்னர் அதன் ருசி அறிந்தபின் அதனைவிட்டுக் கொடுக்க பலர் விரும்பு வதில்லை.

எனினும் அதில் மாற்றம் வேண்டும். இதுவரை தற்போதைய தலைவர்கள் செயற்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் அதற்கான தீர்ப் பினை வழங்குவார்கள்.

இச் சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர் ஒருவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்த லில் பொது வேட்பாளர் ஒருவர் களமிறங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பி னார். எதிர்வரும் தேர்தலில் பொது வேட்பளார் ஒருவர் போட்டியிடுவதை நான் எதிர்க்கின்றேன்.

அரசாங்கத்தில் இரு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி சார் பானவர்களே அரசாங்கத்தில் கூடுதலான பங்கினை வகிக்கின்றனர். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் இருப்பாராயின் அவர் போட்டி யிடலாம் அல்லது அந்தத் தலைவர் யார் போட்டியிட வேண்டுமென தீர்மா னிக்க வேண்டும்.

அதனை விடுத்து பொது வேட்பாளர் ஒருவர் களமிறங்குவாராயின் அவர் எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப்போவது இல்லை என்ற எண்ணத்திலேயே நான் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.