Breaking News

அநுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் - ராஜித தெரிவிப்பு.!

வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளாா்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான், கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிய போது  விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலை யிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண் ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இவ் விடயமாக கொழும்பில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித் துள்ளாா்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப் பட்டுள்ளன. எனினும், சுமார் 102 பேருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய் யப்படவில்லையென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இவர்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படை யில் பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கூடியவர்கள் விடுவிக்கப்படு வார்கள்.

எனினும், இவர்கள் அனைவருக்கும் எதிராக 'பீ' அறிக்கை தயாரிக்கப்பட்டிருப் பதாக பிரதமர் தன்னிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்த குற்றவாளிகள் போன்றவர்களை விடுதலை செய்ய முடியாது என்பதை பிரத மர் எடுத்துக் கூறியிருந்தததாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித் துள்ளாா்.