Breaking News

வடக்கில் இராணுவத்தினரின் வசமிருந்த மக்களின் 05 ஏக்கர் காணி விடுவிப்பு.!

வடக்கில் முப்படையினரின் வசமிருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் இருந்த 5 ஏக்கர் காணிகள் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலர்  தெரிவித்துள்ளார். 

1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத் தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணியும் சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கைய ளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள் ளது.

குறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேச செயலக காணி அலுவலர் க.வசந்தன் தெரிவித்துள்ளாா்.