முல்லைத்தீவில் செத்து மடிய தயாராகும் குடும்பங்கள் ?
நாட்டின் நல்லிணகத்திற்கு சிங்கள பேரினவாத சக்திகளே தடையாக இருப்ப தாக அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள பேரினவாத அமைப்புக்களில் செய ற்படும் பௌத்த மத குருமாருக்கு அரசாங் கம் புனர்வாழ்வளிக்க வேண்டுமென ஆர்ப் பாட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல் வேறு இடங்களில் வைத்து கைது செய்யப் பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட் டுள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதனடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 10 பேர் கடந்த 14 ஆம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக வடமாகாணத்தில் பல்வேறு தரப்பினரும் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நீதிமன் றுக்கு அருகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் நடத் தும் கொட்டகைக்கு முன்பாக அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இப் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரை துரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.அமலன் சி.லோகேஸ்வரன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ.அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும் நல்லா ட்சி அரசே சிறையில் இருக்கும் உறவுகளை விடுதலை செய், எங்கள் அரசி யல் கைதிகளுக்கு உடன் நீதி வழங்கு அரசியல் கைதிகளின் விடுதலையை அரசே விரைவு படுத்து உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ள பௌத்த மதகுருமாரை புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறு முல்லைத் தீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்காத பட்சத்தில் குடும்பத்தினருடன் செத்து மடிவதற்கு தயார் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட காணா மல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கமானது சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தை யும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, தமிழ் மக்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போன்று பார்ப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.