Breaking News

உயிருக்கு போராடும் அரசியல் கைதிகளின் நான்கு போ் வைத்தியசாலையில்.!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ள அரசியல் கைதிகள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளின் உடல்நிலைகள் மோசமடைந்து வருவதுடன் பயங்கர வாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சா லையில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்து தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தங்களுக்கு எதிரான விசா ரணைகளை விரைவுபடுத்துமாறும் கோரியும் கொழும்பு வெலிக்கடைச் சிறை யில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 தமிழ் அரசியல் கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.